ஊடங்களுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை!

கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களிடம், அதிமுக குறித்து கருத்துக் கேட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

ஊடங்களுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை!

கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களிடம், அதிமுக குறித்து கருத்துக் கேட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் 5 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருவதால்  அடுத்த அறிவிப்பு வரும் வரை, அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து இன்று அதிமுக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, "கழகத்தின் பிரதிநிதிகள் என்றோ, கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும் வகையிலோ யாரையும் உங்களது ஊடகம் வழியாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டாம் அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கு அதிமுக பொறுப்பு ஏற்க முடியாது. இதனை மீறி, ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊடங்களுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP