Logo

அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு!

சர்க்கரை அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற நவ 29ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ.29ஆம் தேதிக்கு பிறகு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 | 

அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு!

சர்க்கரை அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற நவ 29ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை அட்டையை  அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற விரும்புவோர் நவ.26ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாகவோ, நியாய விலைக்கடைகளிலோ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற விரும்புவோர்  www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ, வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் அலுவலகங்கள் மட்டுமின்றி நியாய விலைக்கடைகள் வாயிலாக வரும் நவ.29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது விநியோக திட்டத்தில் தற்போது 10,19,491 சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளதாகவும்,  சர்க்கரை அட்டையை  அரிசி அட்டையாக மாற்ற நவ.29ஆம் தேதிக்கு பிறகு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP