தேனி சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை ரத்து!

தேனியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 | 

தேனி சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை ரத்து!

தேனியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனியில் கடந்த 2014 டிசம்பர் மாதம், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொமை செய்து கொடூரமாக  கொலை செய்து சிறுமியின் சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு சில மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர். பின்னர், சுந்தர் ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

தொடர்ந்து இந்த வழக்கில், குற்றவாளிகள் மூவருக்கும் தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து கடந்த 2015ல் உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தனர். 

இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான இன்றைய விசாரணையில், தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில் சாட்சியங்கள் மிகவும் தாமதகமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது முறையாக விசாரணை நடத்தவில்லை. இதற்கு விசாரணை அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தரப்பு வாதத்திலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேலும், குற்றவாளிகளை போலீசார் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்"  என்றுஉத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP