எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருமுருகன் காந்தி வேலூர் சிறைக்கு அவசர மாற்றம்!

திருமுருகன் காந்தியை எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர்.
 | 

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருமுருகன் காந்தி வேலூர் சிறைக்கு அவசர மாற்றம்!

திருமுருகன் காந்தியை எந்த முன்னறிவிப்பும்  கொடுக்காமல் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் தொடர்பாகவும், சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு எதிராக திருமுருகன் காந்தி நடத்திய போராட்டம் தொடர்பாகவும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருமுருகன் காந்தி வேலூர் சிறைக்கு அவசர மாற்றம்!

இதற்கிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு சென்னை திரும்பிய திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீசார் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதித்துறை 17வது நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு, திருமுருகன் காந்தியைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருந்தும் அவர் வேறு ஒருவழக்கிற்காக கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக்காவலில் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இன்று அவரது வழக்கறிஞர்கள் புழல் சிறைக்கு சென்ற போது, திருமுருகன் காந்தி அங்கு இல்லை என்றும் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் அங்குள்ள சிறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருமுருகன் காந்தியை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றியுள்ளது பின்னர் தான் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP