அவசர மருத்துவ உதவி 108 சேவை எண் பாதிப்பு!

அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்படும் 108 சேவை எண் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தற்காலிகமாக 044- 40170100 எ ன்ற எண்ணை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அவசர மருத்துவ உதவி 108 சேவை எண் பாதிப்பு!

அவசர மருத்துவ உதவி 108 ஆம்புலன்ஸ் சேவை எண் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தற்காலிகமாக 044- 40170100 என்ற எண்ணை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையானது தற்காலிகமாக பாதிப்படைந்துள்ளது. பி.எஸ்.என்.எல் -இல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நடந்துள்ளது  என்றும், அந்த எண்ணுக்கு பதிலாக தற்காலிகமாக 044- 40170100 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விரைவில் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டு வழக்கம்போல 108 சேவை எண் இயங்கும் என அந்த மையத்தின் இயக்குநர் பிரபு தாஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஒருநாளைக்கு 108 சேவை எண்ணில் சுமார் 4,000 அழைப்புகள் வருவதாகவும், சென்னையில் மட்டும் 900க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP