மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மின்கழகத் தலைவர் சாய்குமார் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 | 

மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!


தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மின்கழகத் தலைவர் சாய்குமார் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை ஆகியவற்றை விரைந்து வழங்கும்படி கோரிக்கை விடுத்தது வந்தனர். கடந்த பிப்ரவரி 12ம் தேதிக்குள் மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தொழிலாளர் நல வாரியத்தின் ஆணையர் தெரிவித்திருந்தார்.

ஆனால்  கூறியபடி அரசு தரப்பில் இருந்து எந்த முயற்சியும் எடுக்காததால், கடந்த 16ம் தேதி மின்வாரியத் தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. அரசு தங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் அடுத்த கட்டமாக ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இன்று அமைச்சர் தங்கமணி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP