சென்னையில் மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து!

பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்சார ரயில் சேவைகள் இன்று பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

சென்னையில் மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து!

பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்சார ரயில் சேவைகள் இன்று பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் இன்று காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை இரு மார்க்கத்திலும், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை இரு மார்க்கத்திலும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  

இதேபோன்று, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பராமரிப்பு பணிகள் முடிந்து வழக்கம்போல ரயில் சேவைகள் தொடங்கும். மேலும், ரயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP