வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து?

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
 | 

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து?

வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதியல் தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்து, அதன்படி வழக்கும் அவர்மீது பதியப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பாக இன்று தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெய்பாலி சரண், "வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வேலூரில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவை எடுக்கும்" என்று கூறினார். 

இதையடுத்து, வேலூரில் கட்டுகாட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், அங்கு தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரையை தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளது. எனவே, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP