பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை எதிரொலி! அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த திட்டம்

தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வருவதால் பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்தி முடிப்பதும், செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்தி முடிப்பதும் சிக்கலாகியுள்ளது. இதனை ஈடுகட்ட பள்ளிகளில் சனிக்கிழமை தோறும் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை எதிரொலி!  அனைத்து  சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த திட்டம்

தொடர் விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகளில் சனிக்கிழமை தோறும் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ஜனவரி 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படி விடுமுறை அறிவித்ததால் 6 நாட்கள் மட்டுமே பள்ளிகள் நடக்கும்.  மீண்டும் 11, 12ம் தேதி சனி ஞாயிறு விடுமுறை வருகிறது.13ம் தேதி ஒரு நாள் பள்ளி,மீண்டும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை பொங்கல் விடுமுறை.இப்படி தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வருவதால்  பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்தி முடிப்பதும், செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்தி முடிப்பதும் சிக்கலாகியுள்ளது.

                                          பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை எதிரொலி!  அனைத்து  சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த திட்டம்

 
10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதால், அதற்குள் பாடங்களை நடத்தி முடிக்க முடியாது என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு, முழு வேலை நாளாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP