ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக குடிநீர் சென்னை வந்தடைந்தது!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக குடிநீர் சற்றுமுன் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது.
 | 

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக குடிநீர் சென்னை வந்தடைந்தது!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக குடிநீர் சற்றுமுன் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது. 

சென்னையில் பெரும்பாலாக அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதை அடுத்து, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலமாக தண்ணீர் எடுத்து வரப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

அதற்கான பணிகள் தொடங்கி முடிவுற்ற நிலையில், கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டங்களும் வெற்றி பெற்றதையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை 7 மணிக்கு தண்ணீருடன் புறப்பட்ட ரயில் சற்றுமுன் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது. தொடர்ந்து டேங்குகளில் உள்ள தண்ணீரானது கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்கில் நீரேற்றம் செய்யப்படவுள்ளது. 

இதையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 லட்சம் லிட்டர் குடிநீரானது சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP