உடை, அலங்காரம் என்று மம்தாவாகவே மாறிய கனிமொழி! திமுக அதிரடி!

திமுகவில் கனிமொழியின் ட்விட்டர் பதிவு திமுக தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
 | 

உடை, அலங்காரம் என்று மம்தாவாகவே மாறிய கனிமொழி! திமுக அதிரடி!

திமுகவில் கனிமொழியின் ட்விட்டர் பதிவு திமுக தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. 

சென்னையில், நேற்றைய தினம், குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திமுக எம்பியும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி பங்கேற்று உரையாற்றினார். 

இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் மூத்த இடதுசாரி தலைவர் நல்லகண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு படமும், மேடையில் பேசுகிற மற்றொரு படமும் உள்ளது. 

இப்படங்கள் தான் திமுக தொண்டர்களை விவாதிக்க வைத்துள்ளது.  அதில் கனிமொழி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போல உடை, சிகை அலங்காரம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு போயஸ் தோட்டத்தில் தனியாக உடைகளை, மேக்கப் என்று சகலமும் ஜெயலலிதாவைப் போலவே உருமாறி தனியே போட்டோஷூட் எல்லாம் செய்தார் சசிகலா. அதன் பிறகு தான் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறைக்குச் சென்றார். ஆட்சியும், கட்சியும் கைவிட்டு போனது.

அதே போல், கனிமொழி, மம்தாவைப் போல காஸ்ட்யூம்ல ஆரம்பிச்சு, சிகை அலங்காரம் வரைக்கும் ஆளே மாறியிருப்பதை அதிர்ச்சியோடும், ஆச்சர்யத்தோடும் பார்க்கிறார்கள் திமுக தொண்டர்கள்.

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP