காவிரி ஆற்றங்கரையோரம் செல்ஃபி எடுக்கக் கூடாது: பொதுமக்களுக்கு எச

மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்தை அடுத்து சேலம், நாமக்கல், திருச்சி உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காவிரி கரையோர மாவட்ட ஆட்சியாளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார்.
 | 

காவிரி ஆற்றங்கரையோரம் செல்ஃபி எடுக்கக் கூடாது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்தை அடுத்து சேலம், நாமக்கல், திருச்சி உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காவிரி கரையோர மாவட்ட ஆட்சியாளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். காவிரி ஆற்றில் நீர் அதிகரிப்பு குறித்து அவ்வப்போது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அச்சப்படும் வகையில் வதந்திகள் பரவுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காவிரி ஆற்றங்கரையோரம் செல்ஃபி எடுக்கக் கூடாது. காவிரி ஆற்றில் குளிப்பதோ, மீன்பிடிப்பதோ, குழந்தைகளை குளிக்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என்று ஆட்சியாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP