குமரிக்கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யூரில் 7.செ.மீ மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP