சும்மா அரைவேக்காட்டுத்தனமா பேசக் கூடாது : பிரபல நடிகரை சாடிய அமைச்சர்!

கல்விக்கொள்கை பற்றி நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
 | 

சும்மா அரைவேக்காட்டுத்தனமா பேசக் கூடாது : பிரபல நடிகரை சாடிய அமைச்சர்!

கல்விக் கொள்கை பற்றி  நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்?. நன்கு தெரிந்துக் கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதிலளிக்க முடியும்? என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு பள்ளிகளுக்கு எவ்வித ஆபத்துகள் இல்லாமலும், எண்ணிக்கை குறையாமலும் அரசு பார்த்துக் கொள்ளும் என்ற அமைச்சர், 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராத வகையில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP