மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் இப்படி செய்வதா? - பாலகிருஷ்ணா ரெட்டிக்கு நீதிபதி கேள்வி

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் பொதுச் சொத்தை சேதப்படுத்துவதா? என சிறைத்தண்டனை பெற்ற பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 | 

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் இப்படி செய்வதா? - பாலகிருஷ்ணா ரெட்டிக்கு நீதிபதி கேள்வி

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் பொதுச் சொத்தை சேதப்படுத்துவதா? கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்? என சிறைத்தண்டனை பெற்ற பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில், தமிழக அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து, பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறியதையடுத்து, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது 

பாலகிருஷ்ணா ரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

விசாரணையில் நீதிபதி, பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 'அரசியல் தலைவராக உள்ளவர் நீதிமன்ற வழக்கை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறை காட்ட வேண்டும். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் பொதுச் சொத்தை சேதப்படுத்துவதா? கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்? 

தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். ஆனால் தீர்ப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை  வைக்க முடியாது. தகுதியிழப்பு ஆவீர்கள் என்பதால் தீர்ப்புக்கு தடை கோருகிறீர்களா?" என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. 

தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த உடனே பதவி விலகியதால் எனது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்ற கோணத்தில் வாதம் நடந்தது. 

இறுதியில், இன்று பிற்பகல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை  பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP