2வது நாளாக தொடரும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 | 

2வது நாளாக தொடரும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஊதிய உயர்வு உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள்  இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு, காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசரகால பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே,  சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP