மோடியை ஏன் கட்டியணைத்தேன் தெரியுமா?: ராகுலின் அசத்தல் பதில்!

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடியபோது, மோடியை ஏன் கட்டியணைத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகுல், அன்று பிரதமர் மோடி மிகவும் கோபமாக இருந்தார். எனவே, அன்பைக் காட்ட கட்டியணைத்தேன் எனக் கூறினார்.
 | 

மோடியை ஏன் கட்டியணைத்தேன் தெரியுமா?: ராகுலின் அசத்தல் பதில்!

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடியபோது,  நாடாளுமன்றத்தில் மோடியை ஏன் கட்டியணைத்தீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகுல், அன்று 'பிரதமர் மோடி மிகவும் கோபமாக இருந்தார்... அவர் மீதான என் அன்பை வெளிப்படுத்த அவரை கட்டியணைத்தேன்' எனக் கூறினார். 

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது அவரிடம் மாணவிகள் பல கேள்விகளை கேட்டனர். 

கடைசி கேள்வியாக, நாடாளுமன்றத்தில் மோடியை ஏன் கட்டியணைத்தீர்கள்? என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராகுல், "அன்பு தான் அடித்தளம். எல்லா மதங்களும் அதைத்தான் சொல்கின்றன. எனக்கு பிரதமர் மோடி மீது கோபமோ, வெறுப்போ இல்லை. 

ஆனால், அவர் அன்று மிகவும் கோபமாக இருந்தார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸை பற்றி மிகவும் ஆவேசமாக பேசிக்கொண்டே இருந்தார். ஆனால், எனக்கு மோடி மீது அன்பு தான் இருந்தது. அந்த மனிதர் உலகின் அழகை பார்க்க தவறிவிட்டார் என தோன்றியது. அவர் அந்த அளவிற்கு கோபமாக இருந்தார். எனவே நான் அவருக்கு அன்பை காட்ட நினைத்தேன். அதனால் தான் மோடியின் இருக்கை அருகே சென்று அவரை கட்டியணைத்தேன். 

2014ம் ஆண்டில் நான் இளைய அரசியல்வாதி. இப்போதும் நான் 'இளைய' அரசியல்வாதி தான். நாங்கள் தேர்தலில் நின்றோம். தோல்வியடைந்தோம். எங்கள் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஆனால், அப்போது ஒரு நல்ல விஷயம் நடந்தது. அப்போது தான் நான் அரசியலை, மக்களை புரிந்துக்கொண்டேன். 

நான் மோடியை பார்த்துக் கற்றுக்கொண்டேன். மோடி என் மீது வெறுப்பை காட்டினார். ஆனால், நான் கோபத்தை அவர் மீது காட்டாமல் இருக்க வைத்தார். எனவே, என்னால் அவரை வெறுக்க முடியாது. உங்களுக்கு கற்றுக்கொடுப்பவரை நீங்கள் வெறுப்பீர்களா? உங்கள் மீது வெறுப்பை காட்டுபவர்கள் தான் உங்களுக்கு ஆசிரியர் என ராகுல் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP