இந்த செல்போன் திருடர்களை தெரியுமா..? 

விலாசம் கேட்பதுபோல் நாடகமாடி அலைபேசியை பறித்துச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 | 

இந்த செல்போன் திருடர்களை தெரியுமா..? 

விலாசம் கேட்பதுபோல் நாடகமாடி அலைபேசியை பறித்துச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை நெற்குன்றம் பகுதியில் வசிப்பவர் ஜெயபாண்டியன். இவர் கடந்த ஞாயிற்றுகிழமை மாலை தியாகராய நகர் சரகத்திற்குட்பட்ட வளசரவாக்கம் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் ஜெயபாண்டியனிடம் விலாசம் கேட்பது போல் நாடகமாடி அவரிடம் இருந்த அலைபேசியை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் கீழே விழுந்த ஜெயபாண்டியனின் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஜெயபாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் வழிப்பறி கும்பலை அடையாளம் கண்டு அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அலைபேசி மற்றும் செயின் பறிப்பு கும்பலின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருடர்களை அடையாளம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP