பொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு தெரியுமா?

தமிழகம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. வழக்கமான நாட்களை விட விடுமுறை நாட்களில் டாஸ்மாக்கில் அமோக விற்பனை நடைபெறும். பொங்கல் பண்டிகையையொட்டி, விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.735 கோடி மதிப்பில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 | 

பொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு தெரியுமா?

பொங்கல் பண்டிகையையொட்டி,  விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.735 கோடி மதிப்பில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. வழக்கமான நாட்களை விட விடுமுறை நாட்களில் டாஸ்மாக்கில் அமோக விற்பனை நடைபெறும். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் டாஸ்மாக் விற்பனை குறித்து அரசால் இலக்கு கூட நிர்ணயிக்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, வழக்கம் போல் டாஸ்மாக் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.750 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வார இறுதி நாட்களையும் சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டன. 

கடந்த 12ம் தேதி ரூ.108 கோடி, கடந்த 13ம் தேதி, ரூ.129 கோடி, 14ம் தேதி ரூ.139 கோடி,15ம் தேதி பொங்கல் தினத்தன்று ரூ.209 கோடி, 16ம் தேதி விடுமுறை, 17ம் தேதி ரூ.150 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

இதன்மூலம் 5 நாட்களில் மொத்தம் ரூ.735 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP