ப.சிதம்பரத்துக்கு எத்தனை வியாதிகள் உள்ளன தெரியுமா

கடந்த 17 ஆண்டுகளாக தனக்கு எட்டு விதமான வியாதிகள் உள்ள காரணத்தால், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது என்று கோரி ஜாமின் வேண்டி ப.சிதம்பரம் விண்ணப்பித்துள்ளார்
 | 

ப.சிதம்பரத்துக்கு எத்தனை வியாதிகள் உள்ளன தெரியுமா

கடந்த 17 ஆண்டுகளாக தனக்கு எட்டு விதமான வியாதிகள் உள்ள காரணத்தால், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது என்று கோரி ஜாமின் வேண்டி ப.சிதம்பரம் விண்ணப்பித்துள்ளார்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யதிருந்தார். ஜாமீன் கோரியதற்கு காரணம்,  தன் உடல் நல குறைவே என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு கீழ்கண்ட வியாதிகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- டைஸ்லிப்பிடிமியா - வினால் (இரத்தத்தில் கொழுப்புச்சத்து சீரின்றி காணப்படுவது)  17 ஆண்டுகள் உள்ளது 
- இதய நோய்
- உயர் இரத்த அழுத்தம். 17 ஆண்டுகளாக பாதிப்பு
- இம்பேர்ட் கிளைசிமியா - வினால் ( சக்கரை அளவு சீரற்ற நிலையில் இருப்பது) 14 ஆண்டுகள்
- மலக்குடல் எரிச்சல் நோய், 2014 முதல்
- ப்ரோஸ்டேட் சுரப்பியில் பிரச்னை, 2009 முதல்
- மைக்கரோஸ்கோப்பிக் ஹிம்மெச்சுரியா ( சிறுநீரில் குருதி வழிவது), 2015 முதல்
- க்ரோன் நோய், 2017 முதல்
- விட்டமின் D பற்றாக்குறை, 2014 முதல்
மேற் குறிப்பிட்டுள்ள வியாதிகளுக்கு தொடர் கண்காணிப்பும், மருத்துவமும் தேவை எனவும், அதனால் தனக்கு  ஜாமீன் அளிக்குமாறும், சிதம்பரம் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தின் ஜாமீன் தொடர்பாக 7 நாட்களில் பதிலளிக்குமாறு சிபிஐக்கு  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP