டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

சிவில் சர்வீஸ், காவல்துறை உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
 | 

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

சிவில் சர்வீஸ், காவல்துறை உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த டிசம்பர் மாத இறுதியில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை  வெளியிட்டது. சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்டவைகளில் மொத்தமாக 139 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 

அதன்படி, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வருகிற மார்ச் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.   தேர்வு முடிவுகளை காண http://tnpscexams.in/ என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும். 

முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு வருகிற ஜூலை 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. முதன்மை தேர்வைத் தொடர்ந்து, இறுதியாக நேர்காணலிலும் வெற்றி பெற வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP