பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கமுடியாது என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் முகநூல் மூலமாக பேசி, நண்பர்களாக பழகி, பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி, நேரில் வரவழைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர் சில காம கொடூரர்கள். அந்த பெண்களை பாலியல் தொந்தரவு/ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதையும் தங்களது மொபைல் போன்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக சில வீடியோக்களும் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களின் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும், அதற்கு எதிராக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்ககோரியும் திமுக சார்பில் இன்று கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது. ஆனால், திமுகவின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோட்டாட்சியர் மறுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கமுடியாது என்று அவர் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP