திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெற்றார்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதையடுத்து, திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
 | 

திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெற்றார்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதையடுத்து, திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். 

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக மொத்தமுள்ள 6 இடங்களில் திமுக, அதிமுக தலா 3 இடங்களில் போட்டியிடுகின்றன.

மக்களவைத் தேர்தலின்போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, திமுகவில் ஒரு இடம் மதிமுகவுக்கு கொடுக்கப்பட்டது. மதிமுக சார்பில்  பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையே, தேசத்துரோக வழக்கில் வைகோவிற்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்பது குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்கள்  நிலவி வந்தன. 

இதையடுத்து வைகோவுக்கு மாற்றாக, திமுக சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ போட்டியிட்டார். நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் வைகோ, மு.சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ, அதிமுக வேட்பாளர்கள் அன்புமணி(பாமக), சந்திரசேகரன், முகமத்ஜான் ஆகிய 7 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 

வைகோவின் மனு ஏற்கப்பட்டதால், அவருக்கு மாற்றாக போட்டியிட்ட என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை இன்று வாபஸ் பெற்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP