திமுக -காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று மாலையில் அறிவிப்பு! - கனிமொழி

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வைத்து அறிவிப்பார் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
 | 

திமுக -காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று மாலையில் அறிவிப்பு! - கனிமொழி

 

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்று மாலையில் வெளியாகும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தீவிர கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - திமுக எம்.பி கனிமொழி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில், திமுக எம்.பி கனிமொழி இன்று சென்னை திரும்பினார்.  அவர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை 7 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வைத்து அறிவிப்பார்.

இன்று மாலை காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். அதன்பின்னர் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்றார். 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸூக்கு, திமுக 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து, அதிமுக-பாமக கூட்டணி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, 'குரங்கு கையில் கிடைத்த பூமாலை என அதிமுகவை ஏற்கனவே பாமக விமர்சித்திருந்தது. இதில் யார் குரங்கு? எது பூமாலை? என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.

அதேபோன்று, திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அதிமுக முயற்சிக்கிறது என்ற கேள்விக்கு, 'வலுவான கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லை. வெற்றி தான் முக்கியம்' என்று பதிலளித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP