திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றது திமுக!

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் தொடர்பான தனது வழக்கை வாபஸ் பெறுவதாக திமுகவின் சரவணன் தெரிவித்துள்ளார்.
 | 

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றது திமுக!

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் தொடர்பான தனது வழக்கை வாபஸ் பெறுவதாக திமுகவின் சரவணன் தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ்-இன் வேட்புமனுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது கைரேகை வைத்தாகவும், இதனால் ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்றும் திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே நேற்று, நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள21 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விடுபட்ட 3 தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க கோரி, மனுதாரர் சரவணன் சார்பில் வழக்கறிஞர் அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் முறையிட்டார். முறையீட்டை ஏற்று,  திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி பதில் அளித்துள்ளார். 

இந்நிலையில், வழக்கு நிலுவையில் உள்ளதால் தான் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்ற அடிப்படையில் மனுதாரர் சரவணன் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார். மனுவை வாபஸ் பெறுவது தொடர்பாக தனது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கடிதம் அளித்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP