திமுகவுக்கு ஆதரவு : அதிமுக நிர்வாகிகள் நீக்கம்!

ஒட்டப்பிடாரம் அதிமுக செயலாளர்கள் இருவர், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
 | 

திமுகவுக்கு ஆதரவு : அதிமுக நிர்வாகிகள் நீக்கம்!

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, ஒட்டப்பிடாரம் அதிமுக நிர்வாகிகள் இருவர் கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தைச் சேர்ந்த இளவேலங்கால் ஊராட்சி அதிமுக செயலாளர் எம்.சி.முருகேசன், அயிரவன்பட்டி கிளை அதிமுக செயலாளர் எம்.சாவித்ரி ஆகியோர் அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டனர். 

கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் வகையில் நடந்துக் கொண்டதால் இருவரும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP