திமுக என்றாலே, 'தில்லு முல்லு கட்சி' தான்: பிரேமலதா ஆவேசம்!

திமுக என்றாலே 'தில்லு முல்லு கட்சி' தான் என்றும், தேர்தலில் கூட்டணி குறித்து, ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 | 

திமுக என்றாலே, 'தில்லு முல்லு கட்சி' தான்: பிரேமலதா ஆவேசம்!

"திமுக என்றாலே, தில்லு முல்லு கட்சி தான்; தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "முதலில் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும், உலக மகளிர் தின வாழ்த்துக்கள். தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் தலைமை கழகம் அதிகார்பூர்வமான அறிவிப்பு வெளிடும். 

அதிமுக, திமுக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையா? என்ற கேள்வியே தவறு. இந்த விஷயத்தில் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் நேற்று தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டார்கள். 

எதிரியே வீட்டிற்கு வந்தாலும் அவர்களை உபசரிக்க வேண்டும் என்பது தான் தமிழர் பண்பாடு. துரைமுருகன் ஒரு கட்சியின் மூத்த தலைவர். எங்களது கட்சி நிர்வாகிகள் இளங்கோ மற்றும் முருகேசன், துரைமுருகனின் வீட்டிற்கு உள்ளே செல்லும் போது, மீடியாக்கள் இல்லை.

அவர்கள் வெளியில் வரும்போது மீடியா இருந்தது. யார் மீடியாவுக்கு தகவல் கொடுத்தார்கள். அவர்கள் மரியாதை நிமித்தமாக துரைமுருகனை சந்தித்துள்ளார்கள். இதில், திமுக அரசியல் சூழ்ச்சியை கையாண்டிருக்கிறது. அங்கே தான் அரசியல் ஆதாயம்  தேட வேண்டுமா? இதைவிட, அரசியல் அநாகரிகம் என்றால் என்ன என்பதை நான் விளக்க முடியாது. 

திமுக என்றாலே, 'தில்லு முல்லு கட்சி' தான். இதனை நான் எப்போதுமே கூறி வருகிறேன்.

துரைமுருகன் பேசியதை நான் முற்றிலும் உளறலாக தான் பார்க்கிறேன். யாரென்றே தெரியாத ஒருவரை, அவர் தனது வீட்டினுள் அனுமதிப்பாரா? நாங்களும் வேலூர் மாவட்டம் தான். வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர் இவ்வளவு கேவலமாக அரசியல் செய்வரா என்பதை நான் துரைமுருகனை பார்த்து தான் தெரிந்துகொள்கிறேன். 

தலைவர் தூங்குகிறார் என்று துரைமுருகன் கூறியது சரியா? ஸ்டாலினை அவரே கேவலப்படுத்துகிறாரா? வயது மூப்பின் காரணமாக அவர் தூக்கத்தில் பேசினாரா? என்று தெரியவில்லை" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP