தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது : அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

இறால் வளர்ப்பில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது : அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

"திமுகவினருக்கு தமிழ் வியாபாரம் தான், தமிழை நேசிக்கிற ஒரே இயக்கம் அதிமுக தான்" என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் உலக நீர்வாழ் உயிரின வளர்ப்பு சங்கம் இணைந்து நடத்தும் "ஆசிய பசிபிக் நீர் வாழ் உயிரின வளர்ப்பு -2019"  கருத்தரங்கை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளப் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆசியாவிலேயே மீன்வளப் படிப்பிற்காக முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தான் என அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் 12 மில்லியன் மெட்ரிக் அளவிலான கடல் சார் உணவு வகைகள்  உற்பத்தி செய்யப்படுவதாகவும், இறால் வளர்ப்பில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றும் ஆளுநர் புகழாரம் சூட்டினார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், " இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கும்போது தமிழகத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெறுவது பெருமை அளிப்பதாகவும், உள்நாட்டு மீன்வளம், கடல் வளத்தை பெருக்கி பொருளாதார வளர்ச்சி மற்றும் அன்னிய செலாவணி ஈட்டுவதற்கு உதவியாக இருக்கும்" எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் இருக்கும் எல்லா வளங்களையும் பெருக்குவதற்கு தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு குறித்து பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்க இது பயனுள்ளதாக இருக்கும்.

"ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்ட பின், அதனை நடைமுறைப்படுத்துவது நல்லது என்று கருத்து அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நீர் மேலாண்மைக்காக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. மழை பொய்த்த பின்னும் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. நவம்பர் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

திமுக எம்பிகள் பதவியேற்றப்பின் "தமிழ் வாழ்க" என கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ் எங்கும் ஒலிக்க வேண்டும், ஆனால் ஏட்டிக்கு போட்டியாக திமுகவினர் செயல்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டார். "திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழுக்கு என்ன செய்தனர்" என கேள்வி எழுப்பிய அவர்,  "திமுகவினருக்கு தமிழ் வியாபாரம் தான், தமிழை நேசிக்கிற ஒரே இயக்கம் அதிமுக தான்" என கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP