அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளிபோனஸ் 8.33%, கருணைத்தொகை 11.37% வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு 20% போனஸூம், நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.போனஸ் வழங்குவதன் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3,48,503 பேர் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP