நாளை முதல் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்- எம்.ஆர். விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20 சதவீதம் போனஸ் மற்றும் ஊக்கத்தொகை இன்று முதல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

நாளை முதல் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்- எம்.ஆர். விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20% போனஸ் மற்றும் ஊக்கத்தொகை இன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்-

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., “சென்னையில் நாளை முதல் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் செயல்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை முதல் தீபாவளிக்கான முன்பணம் வழங்கப்படும். தீபாவளிக்கு பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்கு தொழிலாளர்கள் வேலைக்கு வந்து சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20% போனஸ் மற்றும் ஊக்கத்தொகை இன்று முதல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும் போனஸ் திங்கட்கிழமை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP