"ஊரைவிட்டு வெளியேறுங்கள்" பஞ்சாயத்தில் விபரீத தீர்மானம்

தூத்துக்குடியில் சாதிமறுப்பு திருமணம் செய்த 12 பெண்கள் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என தண்டோராவில் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
 | 

"ஊரைவிட்டு வெளியேறுங்கள்" பஞ்சாயத்தில் விபரீத தீர்மானம்

"ஊரைவிட்டு வெளியேறுங்கள்" பஞ்சாயத்தில் விபரீத தீர்மானம்தூத்துக்குடியில் சாதிமறுப்பு திருமணம் செய்த 12 பெண்கள் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என தண்டோராவில் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள புன்னைகாயல் கிராமத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த 12 பெண்கள் அவர்களின் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என்றும் அவர்களுடன் ஊர் மக்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும்  பஞ்சாயத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 15 ஆண்டுகளில் வேறு ஜாதியில் திருமணம் செய்தவர்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும். கடந்த 20 ஆம் தேதி இன்றைக்குள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு இந்த ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை. ஊரைவிட்டு வெளியேறியவர்கள் உடன் அன்னம், தண்ணீர் புழங்க கூடாது என கிராம மக்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை சாதிமறுப்பு திருமணம் செய்த 12 பெண்கள் மற்றும் அவர்களின் கணவன் பெயர்களும் தண்டோராவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சர்ச்சையை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து தீர்மானத்திற்கு ஊர் தலைவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இனி இது போன்ற தீர்மானம் பஞ்சாயத்தில் பிறப்பிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP