ஆட்சியர் உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற வயதான தம்பதி: தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம்!

மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பார்வையற்ற வயதான தம்பதியருக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்காமல் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் அரங்கேறியுள்ளது.
 | 

ஆட்சியர் உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற வயதான தம்பதி:  தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம்!

மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பார்வையற்ற வயதான தம்பதியருக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்காமல் தரையில் படுக்க வைத்து  சிகிச்சை அளிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. 

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கேத்துவார்ப்பட்டியை சேர்ந்த வயதான பார்வையற்ற தம்பதியர் முத்து - ஒச்சம்மாள். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்து வந்து பலமுறை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுக்களில் தனது ஒரே மகன் முருகனை சொத்துக்காக கொலை செய்து விட்டு தங்களது சொத்துக்கள அதே ஊரை சேர்ந்தவர்கள் அபகரித்து விட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். 

வழக்கம் போல் நேற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த தம்பதியர், மனுவை கொடுத்துவிட்டு பசியால் நடந்து செல்ல முடியாமல் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்திருந்தனர். இதனை கண்ட செய்திளாளர்கள் அவர்களிடம் சென்று விசாரித்த போது, அவர்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் பட்டா மாறுதல் செய்துவிட்டதாகவும், இது குறித்து மனு அளிக்க வந்தததாகவும் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து செய்தியாளர்கள் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து பின்னர், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ராஜசேகரை சந்தித்து அவர்கள் நிலையை எடுத்து கூறினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ரெட் கிராஸ் அமைப்பு மூலம் முதியவர்களை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் முதியவர்களை சந்திக்க சென்றபோது, அவர்களுடன் யாரும் இல்லாததால் அவர்களுக்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுக்காமல் தரையில் படுக்க வைத்தே சிகிச்சை அளிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது  கண்டு செய்தியாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP