தமிழக கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்!!!

கல்வித்துறை இயக்குனர்களான மூன்று பேரை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

தமிழக கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்!!!

கல்வித்துறை இயக்குனர்களான மூன்று பேரை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக கல்வித்துறையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், கல்வியியல் மற்றும் பாடநூல் நிறுவனம், அனைவருக்குமான இடைநிலைக்கல்வி இயக்ககம், அரசுத் தேர்வுகள் இயக்கம், தமிழ்நாடு அரசு நூலகத்துறை, பள்ளிக்கல்வி இயக்ககம், மெட்ரிக் கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் என ஒன்பது உட்ப்பிரிவுகள் உள்ளன.

தமிழக அரசின் கீழ் பணியாற்றி வரும் இக்கல்வித்துறைகளின் 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்ய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றிய ஆசிரியர் சேதுராமன் வர்மா, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக இருந்த உமா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இருந்த ஆசிரியர்  பழனிசாமி தொடக்க கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP