இயக்குநர் பா. ரஞ்சித்தை கைது செய்ய இடைக்காலத்தடை! - மதுரைக்கிளை

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செயவதற்கான தடையை வருகிற 21ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 | 

சோழ மாமன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதையடுத்து, ரஞ்சித் முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி, முத்துக்குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால், அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஜுன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை பா.ரஞ்சித் மீது காவல்துறை எவ்வித கைது நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP