மாணவர்களின் புரிதலால் நீர்த்துப்போனதா நீட் தேர்வு எதிர்ப்பு?

இம்முறை, அனைத்து விதிமுறைகளையும் நன்கு தெரிந்து கொண்ட நம் மாணவர்கள், அதன் படியே தேர்வு மையங்களுக்கு சென்றதால், எவ்வித குழப்பமும் ஏற்படவில்லை. வெட்டிக் கூச்சல் போட்டு அரசியல் ஆதாயம் தேட நினைத்த கும்பல்களுக்கும் வேலையின்றிப் போனது.
 | 

மாணவர்களின் புரிதலால் நீர்த்துப்போனதா நீட் தேர்வு எதிர்ப்பு?

மனைவி, கர்ப்பிணி என்பது நிச்சயமானதும் மகன் அல்லது மகளை டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்ற இலட்சியம் மனதில் வந்து அமர்ந்து கொள்ளும். பின்னர், பிளஸ் 2 தேர்வு முடிந்து மதிப்பெண் பட்டியலைப் பார்க்கும் போதுதான் டாக்டர் கனவு கலையும். அந்த அளவிற்கு மிகப் பெரிய கனவில் தான் பெற்றோர் வாழ்கின்றனர். 

பள்ளித் தாளாளர் ஒருவர், சார் நிர்வாக இட ஒதுக்கீட்டில் மருத்துவம் சீட்டு பெற, ஒரு கோடி செலவாகும், அந்த அளவிற்கா பிளஸ் 2 கட்டணம் வசூலிக்கிறோம் என்கின்றனர். மாணவர்கள், அவரது பெற்றோரை பூம் பூம் மாடு போலவே சில பள்ளிகள் மாற்றிவிடுகிறார்கள். 

இதைத் தவிர கோசிங் கிளாஸ், மருத்துவ நுழைவு தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள், பிளஸ் பாெதுத் தேர்வுக்கு  டியூசன் என்று டாக்டர் சீட் பிடிக்கும் பந்தயத்தில், பல லட்சம் செலவு செய்து  மகன், மகளை ஓட விட்டு தானும் பின்னாலேயே பெற்றோர் ஓடுகின்றனர். 

நீட் தேர்வுக்கு முன்பு வரை, பிளஸ் 2 மார்க் அடிப்படையில் சீட் என்றால், கட்ஆப் 200க்கு 195 மதிப்பெண்ணுக்கு கீழ் வருவதே இல்லை. வசதி படைத்தோர், கவுன்சலிங்கிற்கு முன்பே, அட்வான்ஸ் புக்கிங் செய்கின்றனர்.  மற்றவர்கள், கதி அதோ கதிதான். இந்நிலையில் தான், மருத்துக்கல்லுாரி சந்தையை நோக்கி, கோர்ட் சாட்டையை சுழற்றியது. 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கிய நுழைவுத் தேர்வு முயற்சி, வேறு வழியே இல்லாமல் பாஜக ஆட்சியில் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டது.பாஜக ஆட்சியில் முழு வடிவம் பெற்றதாலேயே, இந்த தேர்வு எதிரியாக மாறிவிட்டது. அதே நேரத்தில், நிர்வாக கோட்டாவிலும் சேதாரம் ஏற்பாட்டதால், நீட் தேர்வு எதிர்ப்பில் எண்ணை ஊற்றப்பட்டது. 

சுப்ரீம் கோர்ட் வரை சென்றுவழக்கு தொடர்ந்தவர், மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். மாநிலம் முழுவதும், நீட் தேர்வு எதிர்ப்பு தலைவிரித்து ஆடியது. ஆனாலும், இன்னொருபுறம் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. அவர்கள் தங்கள் உலகத்திலேயே வாழ்ந்து கடந்த, 5ம் தேதி தேர்வு எழுதி முடித்துவிட்டனர். 

கடந்த ஆண்டு நடந்த தேர்வின் போது, அதை விமர்சனம் செய்தவர்கள், இந்தமுறை பதிவு செய்ததுடன் விட்டு விட்டார்கள். எதிராக கூச்சல் போட்டவர்கள் கூட, தேர்தல் என்பதாலோ என்னவோ மவுனமாக இருந்து விட்டனர். நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூாடது. மாணவியர், தோடு, கம்மல், மூக்குத்தி அணியக்கூடாது. ப்ரீ ஹேர் எனப்படும் தலை முடியை விரித்தபடியே தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. 

ஆனால், இவை அனைத்தும் தமிழக மாணவர்களுக்குத் தான் புதிதானது. காரணம், தேர்வில் காபி அடித்தல், பிட் அடித்தல், பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்வதெல்லாம், இங்கு அதிகம் நடைபெறுவதில்லை.

ஆனால், வட மாநிலங்களில் மேற்கண்ட முறைகேடுகள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். அவர்களுக்கு மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் கூட இவ்வாறான கெடுபிடிகள் அமல்படுத்தப்படுகின்றன. இவ்வளவு கெடுபிடிகள் செய்தால் தான், அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வில் முறைகேடுகளை தடுக்க முடியும். 

இவ்வாறான கெடுபிடிகள், நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதால், அது ஒரு வகையில் எப்போதும் ஒழுங்கை கடைபிடிக்கும் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயப்பதே. இதன் மூலம், ஒழுங்காக படித்த மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். முறைகேட்டில் ஈடுபடலாம் என நினைத்தவர்கள், எவ்வளவு முக்கினாலும் எதுவும் நடக்காது என்பதே நிதர்சனம். 

ஆரம்பத்தில், இதுபோன்ற கெடுபிடிகள், தமிழக மாணவர்களுக்கு புதிதாக தெரிந்ததால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அகில இந்திய அளவிலான தேர்வுகளில், இது போன்ற கெடுபிடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது, நேர்மையாக தேர்வெழுதும் மாணவர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை, தமிழக மாணவர்கள் புரிந்து கொண்டனர் என்றே தெரிகிறது. 

இம்முறை, அனைத்து விதிமுறைகளையும் நன்கு தெரிந்து கொண்ட நம் மாணவர்கள், அதன் படியே தேர்வு மையங்களுக்கு சென்றதால், எவ்வித குழப்பமும் ஏற்படவில்லை. வெட்டிக் கூச்சல் போட்டு அரசியல் ஆதாயம் தேட நினைத்த கும்பல்களுக்கும் வேலையின்றிப் போனது. 

அதே நேரத்தில் நீட் தேர்வு நடைமுறையில் இன்னமும் மாற்றங்கள் ஏற்படுத்த  வேண்டும். தற்போது காலைக்கு பதில் மதியம் தேர்வு தொடங்கியது. இதனால் வெளியூர் மாணவர்கள் சிரமம் இல்லாமல் வர முடிந்தது. அடுத்த ஆண்டு மாவட்டத்திற்கு ஒரு மையம் வைக்க வேண்டும். மாணவன், தன் வீட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் துாரத்திற்குள் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். 

அதிகப்படியான அரசு பயிற்சி மையங்களை அமைத்து, அவற்றில், பிளஸ் 1 மார்க் அடிப்படையில் மாணவர்களை சேர்த்து, அவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கினால், மாணவர்களின் கல்வித் தரம் மேலும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் வங்கித் தேர்வுக்கு நிகராக, நீட் தேர்வையும் எளிமைப்படுத்தினால், அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்கும். போகப் போக அதுவும் சாத்தியம் ஆகும் என நம்புவோம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP