டிக்டாக் விபரீதம்!! 19 வயது மனைவியை கொன்ற கணவன்!

டிக்டாக் விபரீதம்!! 19 வயது மனைவியை கொன்ற கணவன்!
 | 

டிக்டாக் விபரீதம்!! 19 வயது மனைவியை கொன்ற கணவன்!

இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல விபரீதங்கள் இந்த சமூக வலைத்தளங்களின் மோகத்தால் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை அவரது கணவரே கொலைச் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவோ சொல்லியும் கணவரின் பேச்சைக் கேட்காமல், தொடர்ந்து டிக் டாக் செயலியில் வீடியோக்களைப் பதிவேற்றி வந்துள்ளதால் கணவன் மனைவிக்கு இடையே  அடிக்கடி தொடர்ந்து பிரசனை இருந்துள்ளது. இந்நிலையில், மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவன், தன் தம்பியின் துணையுடன் இளம் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று விட்டார்.

டிக்டாக் விபரீதம்!! 19 வயது மனைவியை கொன்ற கணவன்!

ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்த இவருடைய மனைவி சுவர்தா (19)வுக்கு டிக்டாக் செயலியில் வீடியோக்களைப் பதிவேற்றும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அவரது வீடியோக்களுக்கு நாளுக்கு நாள் அதிக லைக்குகளும், பாராட்டுக்களும் கிடைத்துள்ளது. இந்நிலையில், கணவரின் டிக்-டாக் வீடியோ கட்டுப்பாடு காரணமாக சண்டையிட்டுக் கொண்டு, 2 வயது பெண் குழந்தையையும் தூக்கிக் கொண்டு கணவரைப் பிரிந்து தனியே விடுதியில் தங்கியிருந்தார் சுவர்தா.

தனியார் விடுதிக்குச் சென்ற பிறகும், டிக் டாக் செயலியில் தொடர்ந்து அவரது வீடியோக்களை பதிவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்த சின்ன நரசையா, தன் தம்பியுடன் சேர்ந்து சுவர்த்தவை கொன்று சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்.
இந்த சம்பவம் அறிந்து போலீசார் அண்ணன் சின்ன நரசையா, மற்றும் அவரது தம்பியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP