கதறியழும் வைரமுத்து! வைரமுத்துவை நிராகரித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ பட்டம் வழங்கக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்பதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தவிர்த்துள்ளார்.
 | 

கதறியழும் வைரமுத்து! வைரமுத்துவை நிராகரித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கக் கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்பதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தவிர்த்துள்ளார். 

சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டியூட் ஆப் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் வரும், சனிக்கிழமை சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு  கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வைரமுத்துவுக்கு பட்டம் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு பல்வேறு சர்ச்சைகள் எழும்பின. கௌரவ பட்டம் அளிப்பதற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். 

ஏற்கனவே ஆண்டாள் தொடர்பாக சர்ச்சையான கருத்தை தெரிவித்து, தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை பெற்ற வைரமுத்து, பின்னர், பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டவர்களின் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். 

கௌரவ பட்டம் வழங்குவது குறித்து பாடகி சின்மயி, தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த தகவல்களால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்திருப்பதாக கூறப்படுகிறது. 

மத்திய அமைச்சரின் இப்படி திடீரென வைரமுத்துவைத் தவிர்த்தது வைரமுத்துவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து தீவிரமான திமுக ஆதரவாளர். பா.சிதம்பரம் திகார் சிறையில் இருந்த போது பா.சிதம்பரத்தை நேரில் சென்று பார்த்துள்ளார். இருந்தும் பாஜகவின் மேலிடத்தில் தொடர்ந்து செல்வாக்கோடு இருந்துள்ளார். அதனால் எப்படியும் மத்திய அரசின் பெரும் விருது வைரமுத்துவுக்கு கிடைத்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் தான், சும்மாயிருக்காமல் ஆண்டாள் பற்றி பேசி மொத்தத்தையும் அவரே கெடுத்துக் கொண்டார். இத்தனை நாட்களில் மக்கள் அதை மறந்திருப்பார்கள் என்று வைரமுத்து நினைத்திருந்த வேளையில் தான் மீண்டும் சின்மயி விவகாரமும், ஆண்டாள் பேச்சும் விஸ்வரூபம் எடுத்திருப்பது வைரமுத்துவை கதறியழச் செய்துள்ளது.

அதுவும், விழா மார்கழி மாதத்தில் நடைப்பெறுவதால், மக்கள் ஆண்டாளைப் பற்றிய அவதூறு பேச்சை அத்தனை எளிதில் மறந்து விடுபவர்களாக இல்லை. வைரமுத்துவுக்கு டாக்டர்  பட்டம் என்றதுமே கடல் கடந்தும் சமூக வலைத்தளங்களில் எல்லோரும் வைரமுத்துவுக்கு எதிராக ஆவேசமக கருத்துக்களைப் பதிவு செய்யத் துவங்கினார்கள். இதை எல்லாம் கண்டு வைரமுத்து மேலும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP