சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 | 

சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்ரமணியன் உடலுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய உள்துறை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, சுப்பிரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னதாகவே வருகை தந்திருந்தார்.

சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!

அதன்படி, சுப்பிரமணியனின் உடலுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சுப்ரமணியனின் குடும்பத்தாருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் ஆறுதல் கூறினார். மேலும், தமிழக அரசு அறிவித்த ரூ.20லட்சம் நிதியுதவிக்கான காசோலை, பணி நியமன ஆணையை வழங்கினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP