தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: தமிழக அரசு 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: தமிழக அரசு 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் செல்வகுமார் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு பெருக்கத்தை கண்டறிய பூச்சியல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 28,147 பணியாளர்கள் டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP