பிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான விவேக்கின் தாயார் மணியம்மாள் (86), வயோதிகம் காரணமாக இன்று காலமானார். அவரது மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

பிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான விவேக்கின் தாயார் மணியம்மாள் (86), வயோதிகம் காரணமாக இன்று காலமானார். அவர் தனது மகன் விவேக்குடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார்.

அவரது மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது இரங்கல் செய்தியில், " நடிகர் விவேக்கின் தாயார் மரணம் அவரது குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தமது தாயை இழந்து தவிக்கும் நடிகர் விவேக்  மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்" என முதல்வர் கூறியுள்ளார்.
newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP