'டான்செட்' தேர்வு : மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் முதுகலை படிப்புகளில் சேர 'டான்செட்' (TANCET ) நுழைவுத் தேர்வுக்கு மே 8ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 | 

பி.இ. படிப்புகளை முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET , AUCET என்ற இரண்டு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுதவேண்டியிருந்தது. அதாவது, அண்ணா பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு AUCET (Anna University Common Entrance Test) தேர்வையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் சேர 'டான்செட்' (TANCET ) தேர்வையும் எழுத வேண்டும். மாணவர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஏற்ப, ஒரே பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. இந்த நுழைவுத் தேர்வை இந்தாண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பொறியியல் முதுகலை படிப்புகளில் சேர 'டான்செட்' (TANCET ) நுழைவுத் தேர்வுக்கு மே மாதம் 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 25ம் தேதி ஆகும். https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP