இன்று நள்ளிரவு மெரீனாவில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுகிறார் காவல் துறை ஆணையர்!

இன்று நள்ளிரவு மெரீனாவில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுகிறார் காவல் துறை ஆணையர்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
 | 

இன்று நள்ளிரவு மெரீனாவில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுகிறார் காவல் துறை ஆணையர்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

2020 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், க்ளப்கள் அனைத்தும் மும்முரமாக செய்து வருகின்றன. இன்று மதியம் முதலே புத்தாண்டு நிகழ்ச்சிகளும், பார்ட்டிகளும் நகர் முழுவதும் களைக்கட்ட துவங்கியுள்ளன. இந்நிலையில், நாளை காலை வரையில் தொடரும் புத்தாண்டு பார்ட்டிகளில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க சென்னை முழுவதும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு மெரீனாவில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுகிறார் காவல் துறை ஆணையர்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், சொகுசு ரிசார்ட்ஸ்கள் என்று நகரில் உள்ள அனைத்து கேளிக்கை விடுதிகளுக்கும் கடந்த வாரத்தில் இருந்தே பல்வேறு கட்டளைகளையும், விதிமுறைகளையும் போலீசார் விதித்து, அவை பின்பற்றப்படுகிறதா என்று சோதனை செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.  மேலும், கோயில்கள், தேவாலயங்கள், கடற்கரைகள், முக்கியமான சாலைகள் என சென்னையில் முக்கியமான இடங்களாக 100க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களுக்கு அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் மணலில் செல்லக் கூடிய ஏ.டி.வி. வாகனங்கள் மூலம் போலீசார் தொடர்ந்து ரோந்து செல்வார்கள் என்றும், மெரீனாவில் கடற்கரையோரத்தில் குதிரைப்படையினா் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு மெரீனாவில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுகிறார் காவல் துறை ஆணையர்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

மேலும், மயிலாப்பூா், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராய நகா், அடையாறு, பரங்கிமலை மலை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூா், அண்ணாநகா் மற்றும் புளியந்தோப்பு ஆகிய காவல் மாவட்டங்களில் 368 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதலே வாகனப் பந்தயத்தில் ஈடுபடுபவா்களை பிடிக்க 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநா் உரிமம் உடனடியாக  ரத்து செய்யப்பட்டு, கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் எச்சரித்துள்ளார். மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொதுமக்களைக் கண்காணிக்க 25 ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இன்று நள்ளிரவு மெரீனாவில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுகிறார் காவல் துறை ஆணையர்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் மெரீனா கடற்கரையின் காந்தி சிலையின் முன்பு புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கம் போல நடைபெறுகிறது. இங்கு காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், இன்று  நள்ளிரவு புத்தாண்டு பிறக்கும் போது காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டுகிறார்.  மேலும் பொதுமக்களுக்கு, காவல்துறையின் சார்பில் கேக் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP