தேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 4 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் பயனடையும்.
 | 

தேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து, இன்று சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தனர். 

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், "தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாசன வசதி பெறுவதற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 4 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆழ்குழாய் மூலம் ஏற்கெனவே ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள குறுவை  சாகுபடியும் பயன்பெறும்.

தேவையான அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்

தூர்வாரும் பணியையும், குடிமராமத்து பணியையும் விரைவில் முடிக்குமாறு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூர்வாரும் பணி, குடிமராமத்து பணி தொடர நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான பகுதிகளில் தூர்வாரும் பணி முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும். 

தண்ணீரை விவசாயிகள்  சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேட்டூரில் நீர் இருப்பு, நீர் வரத்து, எதிர்பார்க்கப்படும் மழை, கர்நாடகத்திடம் இருந்து சட்டரீதியாக கிடைக்க வேண்டிய தண்ணீர் ஆகியவற்றை பொருத்து  விவசாயத்துக்குத் தேவைக்கேற்ப தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும்.

கடந்த ஆண்டு கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அதேபோல நிகழாண்டும் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும். தற்போது  நாற்று விடும் பணிதான் நடைபெறுகிறது. பயிர் செய்யும்போது முழுமையாகத் தேவைப்படும் தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது விடப்படும் தண்ணீர் குளங்கள், ஏரிகளை நிரப்ப உதவும். பயிர்கடன் தேவையான அளவுக்கு வழங்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்" என கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP