நாகையில் கைதான இருவருக்கு நீதிமன்ற காவல்

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை நிறுவி அதற்கென நிதி திரட்டிய குற்றச்சாட்டில் நாகையில் கைதான அசன்அலி, ஹாரிஸ் முகமது ஆகிய இருவரையும் வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 | 

நாகையில் கைதான இருவருக்கு நீதிமன்ற காவல்

நாகையில் கைதான அசன்அலி, ஹாரிஸ் முகமதுவை 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கி தமிழகத்தில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கு வேண்டி நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் அசன் அலி, ஹாரிஸ் முகமதுவை என்ஐஏ கைது செய்தனர்.

இருவரும் பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP