சாலையில் கிடந்த பணத்தை தூக்கி கொண்டு ஓடிய தம்பதி; கேமராவில் மாட்டிக்கொண்டனர்

மதுரையில் சாலையில் கிடந்த ரூ.4.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய தம்பதியினரை, சிசிடிவி கேமரா மூலம் தெரிந்தகொண்ட காவல்துறையினர், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 | 

மதுரை ஐராதவதநல்லூர் பகுதியை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர், வெங்கலகடைத் தெருவில் அரிசி மாவு விற்கும் தொழிலை செய்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன், தன் கடையிலிருந்து ரூ.4.5 லட்சம் பணத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது, பணம் வழியில் விழுந்துவிட்டது. பின்னர் வீட்டிற்கு சென்ற சக்கரவர்த்திக்கு, பணம் கீழே விழுந்துவிட்டது என்று அப்போதுதான் தெரிந்தது.

இதனைத்தொடர்ந்து, பதறியடித்து, தான் வந்த வழியெல்லாம் பணத்தை தேடியிருக்கிறார் சக்கரவரத்தி. ஆனால், பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, இதுதொடர்பாக, மதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், சக்கரவரத்தி வாகனத்தில் வழியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பார்த்தபோது, இருசக்கரவாகனத்தில் வாகனத்தில் வந்த தம்பதியனர் ஒருவர் அந்த பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைக்காமல், அவர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, பணத்தை தூக்கி கொண்டு சென்ற தம்பதியினரை வலைவீசி தேடி வருகின்றனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP