அப்பாவி இளைஞரை சுட்டுக் கொன்ற போலீசார்! சுட்டது யார் என அதிகாரிகளுக்குள் சண்டை!

போராட்டத்தில் இளைஞரை சுட்டுக்கொன்றது யார்? - காவல் அதிகாரிகளுக்குள் சண்டை
 | 

அப்பாவி இளைஞரை சுட்டுக் கொன்ற போலீசார்! சுட்டது யார் என அதிகாரிகளுக்குள் சண்டை!

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும்போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 21 பேர்  உயிரிழந்தனர். இதில், கடந்த 20-ந்தேதி, பிஜ்னோரில் நாதார் பகுதியில் சுலைமான் (வயது 22)  என்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். போலீஸ் துப்பாக்கி சூட்டில்தான் அவர் இறந்ததாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், ‘‘கலவரத்தின்போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் கூட பலியாகவில்லை, கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தான், தவறுதலாக பலர் உயிரிழந்தனர் என்று மறுப்பு தெரிவித்தார். 

அப்பாவி இளைஞரை சுட்டுக் கொன்ற போலீசார்! சுட்டது யார் என அதிகாரிகளுக்குள் சண்டை!இந்நிலையில், டி.ஜி.பி. கருத்துக்கு மாறாக பிஜ்னோர் மாவட்ட போலீசார், தங்களது துப்பாக்கி சூட்டில் சுலைமான் பலியானதாக ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த 20-ந்தேதி வெள்ளிக்கிழமை, ஒரு வன்முறை கும்பல், போலீஸ் நிலையத்தை தாக்கியது. சப்-இன்ஸ்பெக்டர் ஆசி‌‌ஷ் தோமரின் துப்பாக்கியை பறித்தது. ஒரு போலீஸ்காரர், அதை திரும்பப் பெற முயன்ற போது, அவரை சுட்டது. தற்காப்புக்காக போலீஸ்காரர் திருப்பிச் சுட்ட போது, கலவரக்காரர்களில் ஒருவரான சுலைமான் குண்டு பாய்ந்து பலியானார்.

அப்பாவி இளைஞரை சுட்டுக் கொன்ற போலீசார்! சுட்டது யார் என அதிகாரிகளுக்குள் சண்டை!

அதுபோல், கலவர கும்பல் சுட்டதில் அனிஸ் என்பவர் பலியானார். இவ்வாறு அவர் கூறினார். ஆனால், சுலைமான், சிவில் சர்வீசஸ் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்ததாகவும், அவருக்கும் கலவரத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP