மொழி குறித்த சர்ச்சை: செங்கோட்டையன் பதில்!

பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் தமிழ்மொழியின் தொன்மை குறித்து இடம்பெற்ற தவறான தகவல்கள் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 | 

மொழி குறித்த சர்ச்சை: செங்கோட்டையன் பதில்!

பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் தமிழ்மொழியின் தொன்மை குறித்து இடம்பெற்ற தவறான தகவல்கள் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய பாடத்திட்ட பிளஸ் 2 ஆங்கில பாடப்புத்தகத்தில் மொழிகள் குறித்த ஒரு பிரிவில், தமிழ் கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக விளங்குவது தமிழ் மொழி.

பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் தமிழ்மொழியின் தொன்மை குறித்து இடம்பெற்ற தவறான தகவல்கள் நீக்கப்படும். இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய தீர்வாக, பாடப்புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டடுள்ளது" என்று பதில் அளித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP