குடிமராமத்து பணிகளை தொடர்ந்து கண்காணிக்கவும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 | 

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மற்றம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேசிய முதலமைச்சர், மக்கள் இயக்கமாக உருவாக்கி குடிமராமத்து பணிகளை நிறைவேற்றி வருவதாகவும், அரசின் கனவுத்திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP