கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கண்டெய்னர் லாரி முழுவதும் சோதனை!

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு பிடிபட்ட கண்டெயினர் லாரியில் டீத்தூள் இருந்தது தெரியவந்த நிலையில், முழுவதுமாக வாகனத்தை சோதனையிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கேட்டுகொண்டதை அடுத்து நள்ளிரவு 2 மணியளவில் கண்டெயினர் சீல் வைக்கப்பட்டுள்ளது.
 | 

மீண்டும் இன்று நண்பகல் 12 மணியளவில் ஆட்சியர் ராசாமணி முன்பு சோதனை நடைபெற்றது. மேலும் வருமானவரி , ஜி.எஸ்.டி, சுங்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலாத்தில் பிடிக்கப்பட்ட கண்டெயினர் லாரியில் இருந்த அனைத்து மூட்டைகளும் வேறு லாரிக்கு மாற்றப்பட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி, "தேர்தல் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வரும் சூழ்நிலையில், நேற்றிரவு பொதுமக்களால் கண்டெயினர் சிறைப்பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நடவடிக்கைகள் நேற்றிரவில் இருந்து நடைபெற்று வருகிறது. 150 பறக்கும்படை குழுக்கள் நியமிக்கப்படு தொடர் ஆய்வில் பிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் 153 கிலோ பறிமுதல் ஸ் செய்யப்பட்டுள்ளது. அதில், 1 கிலோ தங்கம் மட்டும் உரிய ஆவணம் செலுத்திய பின்பு விடுவிக்கப்பட்டது. அதேபோன்று, கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் 250 கோடி மட்டும் உரிய ஆவணம் சமர்பித்தபின்பு விடுவிக்கப்பட்டது. 

பணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கண்டெயினர், அதிகாரிகள் முன்னிலையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் எந்தவிதமான அசம்பாவிதம் இல்லாமல் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. 

தேர்தல் விதிகளை யார் மீறினாலும் தயவு தாட்சியமின்றி வழக்குப்பதிவு செய்யப்படும். கட்சிப் பாகுபாடு ஏதும் பார்க்க மாட்டோம். தேர்தல் நிர்வாகம் மிகச்சிறப்பாக கடுமையாக வேலைப்பார்த்து வருகிறது. ஆளும் கட்சி மீதும் வழக்கு பதிவு செய்து தேர்தல் பணிகள் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP