பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் 28ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
 | 

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியுள்ளது. இன்று முதல் 28ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று பொறியியல் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தொடங்கிவைத்துள்ளார். 

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. காலை 80 பேருக்கும், மாலை மீதமுள்ள 58 பேருக்கும் நடைபெறுகிறது. தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு நடைபெறுகிறது.  

தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP